சபரிமலை விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க பந்தள அரச குடும்பம் முடிவு

ந்தளம்

ச்சநீதிமன்றம் சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து பந்தள அரச குடும்பத்தினர் ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

சபரிமலை கோவிலுக்கு செல்ல 10 முதல் 50 வயதான பெண்களுக்கு நெடுநாட்களாக  அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.   அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது.   இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

சபரிமலை ஐயப்பனை சிறு வயதில் இருந்து பந்தள மன்னர் வளர்த்தாக கூறப்படுகிறது.   ஒவ்வொரு வருடமும் மகரஜோதி அன்று ஐயப்பனுக்கான ஆபரணப் பெட்டியை பந்தள அரச குடும்பத்தினர் எடுத்துச் சென்று அணிவிப்பது வழக்கம்.     இனி தீர்ப்பை எதிர்த்து ஆபரணப் பெட்டியை அரச குடும்பம் அனுப்பாது எனவும்  அரச குடும்பத்தினர் தீர்ப்புக்கு ஆதரவு  எனவும் விதம் விதமாக செய்திகள் பரவின.   ஆனால் பந்தள அரச குடும்பத்தினர் ஒன்றும் சொல்லவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பந்தள அரண்மனை நிர்வாகி சசிகுமார் வர்மா, “உச்சநீதிமன்றம் யாரையோ திருப்தி படுத்த இவ்வாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.   இந்த தீர்ப்பு பல கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு மன வருத்தம் அளித்துள்ளது.    பந்தள அர்ச குடும்பத்தினர் இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்து அமைப்பினருடன் சேர்ந்து போராடா தீர்மானித்துள்ளனர்.   அத்துடன் சட்ட ரீதியாக போராடவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

அரச குடும்பத்தினர் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.    உச்சநீதிமன்றம் சபரிமலையில் பாலினப் பாகுபாடு உள்ளதாக கூறியது தவறானது.   சாமி ஐயப்பன் பிரம்மசாரி என்பதால் இளம் பெண்களுக்கு மட்டுமே அங்கு அனுமஹ்டி மறுக்கப்படுகிறது.    மற்ற வயதுப் பெண்கள் அங்கு தரிசனம் செய்து வருகின்றனர்.   இந்த விஷயம் கூட அறியாதவர்கள் எவ்வாறு நீதிபதியாக உள்ளனர் ?  இந்த விதிமுறைகளை விளக்க வழக்கறிஞர்கள் முயன்ற போது நீதிபதிகள் கண்டுக் கொள்ளவில்லை.

இந்த உத்தரவின் பேரில் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கோவிலுக்கு செல்லலாம் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வருந்தத் தக்கதாகும்.  இந்து சமூகம் தான் இந்துக் கோவில்களின் ஆசார முறிகளை நிர்ணயித்துள்ளது.   ஆசாரங்களை மாற்ற உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.   இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்தினால் அதிகபட்சமாக 10% பெண்கள் கூட ஆதரவு அளிக்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளர்.