சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு திருவாபரண மாளிகையை பக்தர்கள் பார்வையிட பந்தள அரண்மை குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று பகல் 2 மணி முதல் ஐயப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு, நடை மீண்டும் அடைக்கப்பட்டது. அப்போது புதிய நம்பூதிரி சுதீர் நம்பூதிரியிடம் கோவில் நடை சாவி ஒப்படைக்கப்பட்டது. இன்று காலையும் வழக்கம் போல நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன் பின்னர் மகரவிளக்கு காலத்திற்காக மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 15ம் தேதி மகரஜோதியும் கொண்டாடப்படுகிறது. மகரஜோதியின் போது ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரண பெட்டி கொண்டுவரப்படும்.

https://www.facebook.com/PandalaKottaram/photos/a.242526513341210/444806653113194/

தற்போது மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் தொடங்கியுள்ள நிலையில், திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள மாளிகையை பக்தர்கள் பார்வையிட பந்தள அரண்மை குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர். ஜனவரி 12, 2020 வரை காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை, பந்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள, பந்தள தர்மசாஸ்தா கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் திருவாபரண மாளிகையில், திருவாபரணங்களை பக்தர்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பக்தர்களின் வசதிக்காக கூகுல் வரைபடமும் (https://maps.app.goo.gl/caYZBTKf8UEXHJKn9) பந்தள அரண்மனை குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.