‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை! கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை

தனியார் டிவியில் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடர் மூலம் பிரபலமடைந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா,  இவர், கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரா திருமணம் செய்து சில மாதங்களே ஆனதால், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் (RDO – Revenue District Officer) திவ்யா  கடந்த 14ந்தேதி முதல் விசாரணை மேற்கொண்டார்,  சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது  பெற்றோர், மேலும  தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர்- நடிகைகள்,  நெருங்கிய நண்பர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்டிஓ சித்ரா அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவர் 16 பக்க அளவிலான அறிக்கை தயாரித்து வழங்கியுள்ளார். அதில், வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது.