Random image

ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர் பாண்ட்யாவும் ஜடேஜாவும்: கிளென் மேக்ஸ்வெல்

கான்பெரா: ஹர்திக் பாண்ட்யாவும், ரவீந்திர ஜடேஜாவும், வெற்றியை, தங்களிடமிருந்து பறித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்.

அவர் கூறியிருப்பதாவது, “பாண்ட்யா மற்றும் ஜடேஜாவின் ஆட்டம், ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றிவிட்டது. அவர்கள் 150 ரன்கள் எடுத்திருந்தபோது, நாங்கள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தோம். எங்களுக்கு இன்னும் 1 விக்கெட் தேவைப்பட்டது ஆட்டத்தை மொத்தமாக கையில் எடுத்துக்கொள்வதற்கு.

ஆனால், 6வது மற்றும் 7வது விக்கெட் வரிசையில் களத்தில் நின்ற பாண்ட்யா மற்றும் ஜடேஜா, எங்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஆட்டத்தை மொத்தமாக எங்களிடமிருந்து எடுத்துக்கொண்டனர்.

அலெக்ஸ் கேரி ரன் அவுட் ஆனது முற்றிலும் எனது தவறுதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த அவுட், ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. டெத் ஓவர்களில், பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார் மேக்ஸ்வெல்.