இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகீர்கான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். ரோகித் சர்மா சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் அதிரடி வீரர்கள் கப்திலும், குர்ணால் பாண்டியாவும் சிறப்பாக ஆடியதால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 206 ரன்கள் குவித்தது. டெல்லி ஸ்பின்னர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தார். குறிப்பாக இம்ரான் தஹிர் பந்துகள் நான்கு ஓவரில் 59 ரன்கள் கொடுத்தார். 37 பந்துகளை குர்ணால் பாண்டியா 86 ரன்கள் குவித்தார இதில் 7 பெண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸ்கள் அடங்கும். .
images (2)
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆட்டக்காரர்கள் அடித்து அட முயற்சில் அவர்களது விக்கெட்கள் இலக்க 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணிதரப்பில் டி காக் மட்டும் 40 ரன்கள் குவித்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதிரடியாக ஆடிய குர்ணால் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் மும்பையின் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.