பம்பா:

ங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலின்  நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 21ந்தேதி அன்று இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. அதையொட்டி, சபரிமலை கோவில் நடை  தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் திறக்கப்படும் என்று  திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, மார்ச் 11 தொடங்கி 21 ம் தேதி வரை விழா நடைபெறும் என்றும் தேவசம் போர்ட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் ஏ.பத்மகுமார் கூறியதாவது,  சபரிமலையில் வருடாந்திர உற்சவம் 21-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. கோயில் நடை திங்கள்கிழமை திறக்கப்படும்போது, கருவறை வாயிலில் தங்கத் தகடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்ட உள்ளன. தற்போதுள்ள கதவில் விரிசல்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, புதிய கதவுகள் பொருத்தப்பட உள்ளது.

தரமான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட புதிய கதவில் சுமார் 4 கிலோ எடையுள்ள தங்கத்திலான தகடுகள் வேயப்பட்டுள்ளன. இந்த தங்கத்துக்கான செலவை, ஐயப்ப பக்தர்கள் குழுவே ஏற்று கொண்டுள்ளது என்று கூறினார்.