ஆபத்தில் உள்ள மகளிரிடம் எஸ் எம் எஸ் சார்ஜ் வசூலிக்கும் அரசு செயலி

க்னோ

பத்தில் உள்ள மகளிர் அவசர செய்தி அனுப்ப வசதி செய்யும் செயலி ஒன்றை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அமைத்துள்ளதில் குழறுபடி ஆகி உள்ளது.

அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பானிக் (PANIC) என்னும் செயலி ஒன்றை அமைத்துள்ளது.    ஆபத்தில் உள்ள மகளிர் இந்த செயலியில் உள்ள பானிக் என்னும் பட்டனை அழுத்தினால் உடனே அவர்களைப் பற்றிய செய்தியை அருகில் உள்ள காவல் நிலையம்,  ஒரு சமூக சேவை மையம்,  அந்தப் பெண்ணின் ஒரு நெருங்கிய உறவினர் மூவருக்கும் குறும் செய்தி போய் சேரும்.    இந்த குறும் செய்தி முற்றிலும் இலவசமானது என அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக இந்த செயலி உத்திரப் பிரதேசத்தில் 2000 மகளிரிடம் அளிக்கப்பட்டுள்ளது.    சோதனைக்காக அளிக்கப்பட்டுள்ள இந்த செயலியில் மகளிர் அபாய செய்தியை அனுப்பி உள்ளனர்.  அப்போது அவர்களிடம் இருந்து குறும் செய்திகான கட்டணம் பெறப்பட்டுள்ளது.   இதற்கு அந்தப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த செய்தி அருகில் உள்ள காவல் நிலையம், சமூக சேவை மயம் மற்றும் பெண்ணின் உறவினர் ஆகியோருக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   சோதனையின் போது இந்த செய்தி மூன்று பேரில் ஒருவருக்கு மட்டும் சென்றுள்ளது.   அத்துடன் மூன்று குறும் செய்திகளுக்கான கட்டணம் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த செயலியை அறிமுகம் செய்த அதிகாரி ஒருவர், “இந்த செயலி தற்போது தான் உபயோகத்துக்கு வந்துள்ளது.  இது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது.  இது போல நான்கு அல்லது ஐந்து இடஙகளில்  சோதனை நடத்திய  பிறகே ஒரு முட்வுக்கு வர வேண்டும்.   விரைவில் இந்த குறைகள் களையப்படும்”  என தெரிவித்துள்ளார்.