சேலம் அருகே பரபரப்பு: இறந்ததாக நினைத்து முதியவரை உயிருடன் குளிர்சாதன பெட்டியில் வைத்த கொடுமை…

சேலம்: சேலம் மாவட்டத்தில்,  இறந்ததாக கருதி 78 வயது முதியவரை உயிருடன், இறந்தவர்களின் சடலங்களை வைக்கும் குளிர்சாதன பெட்டியில் (FREEZER BOX) வைத்திருந்த கொடுமை அரங்கேறி உள்ளது.  இந்த சம்பவம் அந்த பகுதியில்  அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டி அருகே, பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசித்து வருபவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த பாலசுப்பிரமணிய குமார், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். ஆனால், இறந்து விட்டதாக கூறிய அவரது சகோதரர், FREEZER BOX வரவழைத்துள்ளார்.  அதையடுத்து, முதியவரை பிரிஷர் பாக்சுக்குள் வைத்துள்ளனர்.

மறுநாள் வந்து,  இறுதிசடங்கு நடத்துவதற்காக பிரிஷர் பாக்சை திறந்தபோது, முதியவரின் உடல் அசைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும், அவர் கண்விழித்தார். ஆனால், அவரது குடும்பத்தினரோ, பாலசுப்ரமணிய குமார் இறந்துவிடுவார், அவரது ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டுச் செல்லவில்லை என்றும், இன்னும் சற்று நேரத்தில் உயிர் பிரிந்து விடு  அதனானால், , பிரிஷர் பாக்ஸ் மேலும் ஒருநாள் இங்கே இருக்கட்டும் என்று தடுத்துள்ளனர்.

இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் பறந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  சூரமங்கலம் காவல்துறையினர் FREEZER BOX-க்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்ரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில்,  பாலசுப்ரமணிய குமாரின் உடல் நிலை கவலைக்கிடமானதால், அவரது சகோதரர், அவரை FREEZER BOX-ல் வைத்துவிட்டு, இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.