Random image

விமான பயணிகளின் காது மூக்கில் ரத்தக்கசிவு: மும்பை விமானத்தில் பரபரப்பு

மும்பை:

ன்று காலை மும்பை டூ ஜெய்ப்பூர் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற பயணிகளுக்கு திடீரென காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பயணிகள் மிகுந்த பயத்துக்கு ஆளானார்கள்.

இதையடுத்து, விமானம் உடனடியாக மும்பை விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. விசாரணையில்,
விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் அதில் பயணம் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.

மும்பையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் 9W 0697 விமானம் சுமார் 166 பயனிகளுடம் ஜெய்பூர் புறப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் உயரே செல்லச் செல்ல பயணிகள் அசவுகரியத்தை உணர்ந்துள்ளனர். இந்த நிலையில், விமானத்தினுள் இருந்த  30 பயணிகளுக்கு  மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது.

திடீரென ரத்தம் வந்ததால், இருக்கைகளுக்கு மேல் பொருத்தப்பட்ட ஆக்சிஜன் மாஸ்குகள் பயணிகளின் பயன்பாட்டுக்காக இறக்கிவிடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இதையடுத்து விமானம் புறப்பட்ட 45 நிமிடத்தில் மீண்டும்  மும்பைக்குத் திருப்பப்பட்டது.  மும்பை விமான நிலையத்தில் மருத்துவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி அளித்தனர்.  இதுகுறிதுத  விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இதை தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ்-ல் காற்றழுத்தத்தை பராமரிக்கும் அமைப்பை இயக்க பணிக்குழு மறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகு விமான நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.