பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் மரணம்!

சென்னை:

பிரபல தமிழ்  திரைப்படத் தயாரிப்பாளரும்,கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் இன்று காலையில்  சென்னையில் காலமானார்.  அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவால் அவர் காலமானதாக அவரது  குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ILAYARAJA-510

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பானியை வைத்து படம் தயாரித்தவர்  பஞ்சு அருணாசலம். உடல்நலக்குறைவால் அவரது  வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.  இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து உயிர் பிரிந்ததது.

சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சு அருணாசலம், இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்  என பன்முகத்திறமை கொண்டவர்.

பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவை  தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம். அவரது அன்னக்கிளி படம் மூலம் இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமாகி உலகப்புகழ் பெற்றார்.

panchu_arunachalam_70 birthday

அன்னக்கிளி போன்ற ஒருசில  படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். அதிகமான படங்கள் சூப்பர் ரஜினி,  கமலைக் கொண்டே தயாரித்துள்ளார்.

2011ம் ஆண்டு அவரது 70வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பஞ்சு அருணாசலத்தின் மறைவு கேட்டு தமிழ் திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.