உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப்: நடப்பு சாம்பியன் பங்கஜ் அத்வானி அரையிறுதிக்கு முன்னேற்றம்

pankajadvani_ptiகத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்றவருடம் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி இந்த வருடமும் பட்டம் வெல்லும் முனைப்பில் விளையாடி வருகின்றார்.

இப்போட்டியில், நடப்பு சாம்பியனான பங்கஜ் அத்வானி முதல் இரண்டு சுற்றுகளில், தலா 5-3 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானின் பாபர் மசிஷ், மலேசியாவின் கீன் ஹூ மோ ஆகியோரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

காலிறுதி சுற்றில் தாய்லாந்து வீரர் தனாவட்யை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.