ஆசிய ஸ்னூக்கர் தொடரில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி

ஆசிய ஸ்னூக்கர் தொடரில் இந்தியாவை சேர்ந்த பங்கஜ் அத்வானி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பங்கஜ் அத்வானி அயர்லாந்து வீரருடன் மோதி வெண்கலம் வென்றார்.

pankaj

ஆசிய ஸ்னூக்கர் தொடர் ஈரானில் உள்ள தப்ரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஸ்னூர்க்கர் போட்டியின் அரையிறுதி சுற்றில் உலகம் சாம்பியன்பட்டம் வென்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி அயர்லாந்தை சேர்ந்த பிரண்டன் கோடோனோகியை எதிர்கொண்டார். முதல் சுற்றில் பிரண்டன் இரண்டு 20 பிளஸ் பிரேக் புள்ளிகள் பெற்று, 48-1 என வென்றார். இரண்டாவது சுற்றில் 61 புள்ளிகள் பெற்ற பிரண்டன் 2-0 என முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து மூன்றாவது சுற்றிலும் அசத்திய பிரண்டன் முன்னிலை பெற்றார். பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கஜ் போராடியும் தோல்வியை தழுவினார். இதையடுத்து பிரண்டன் பங்கஜை 1-48, 8-61, 37-48, 41-71, 25-66 என்ற செட்களில் வெற்றிக் கொண்டார். இதில் தோல்வியடைந்த பங்கஜ் வெண்கலப்பதக்கம் வென்றார்.