பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பங்கஜ் அத்வானி இரண்டு கோப்பையை வென்று அசத்தல்!

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி இரண்டு கோப்பையை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் 21வது சாம்பியன்ஷிப் பட்டத்தை பங்கஜ் வென்றுள்ளார்.

advani

உலக பில்லியர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி மியான்மர் நாட்டில் உள்ள யாங்கான் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சக் வீரரான பாஸ்கரை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே அசத்திய பங்கஜ் 190, 173, 198 என மொத்தம் 1500 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதேபோன்று ஷார்ட் பிரிவிலும் பங்கேற்ற பங்கஜ் வெற்றிப்பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் பங்கஜ் அத்வானி 21வது சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 2018, 2917, 2016, 2015, 2009, 2008, 2005, 2004, 2003ம் ஆண்டுகளில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை கைப்பெற்றியது குறிப்பிடத்தக்கது.