பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், அரசியல் பிரமுகர்களையும் விட்டு வைக்கவில்லை. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரை கொரோனா தாக்கி வருகிறது.

இந் நிலையில் தற்போது பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது.

இதையடுத்து எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் சத்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்யா மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வும், அவரது குடும்பத்தினர் 3 பேரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 2வது எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் ஆவார். முன்னதாக தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.