பப்பாளி இலை – அலோபதி மற்றும் சித்த மருத்துவ பயன்கள்
Carica Papaya Leaf

பப்பாளி இலையில் உள்ள சத்துவிபரங்கள்

பப்பளாளி இலையில்  விட்டமின் ஏ, பி1, சி மற்றும் இ போன்றவை உள்ளன, அதோடு
புரதம், கார்ப்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்புசத்துகள் உள்ளன. சோடியம்,
பொட்டாசியம், மெக்னிசீயம் போன்ற தாதுக்கள் உள்ளன

இவைகளோடு Papain, alkaloids and phenolic & Antioxidant போன்ற
வேதிப்பொருட்கள் உள்ளன

அலோபதியில் பப்பாளி இலையின் பயன்கள்

இதில் இருக்கும் ஆன்டாசிடென்ஸ் மற்றும்   Papain, alkaloids and phenolic போன்ற வேதிப்பொருட் களால் நோய் எதிர்ப்பு திறன்  Immune Booster அதிகரிக்கிறது,  இன்றைய காலக்கட்டத்தில் டெங்கு சுரத்தால் NS1 என்ற ஆன்டிஜென்  உள்ள நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள இரத்த தட்டுக்கள்
(Platelet) குறைவாக இருந்து  Thrombocytopenia என்ற இரத்தத் தட்டுக்கள் குறைபாடால் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு உடையவர்கள் Denque Shock Syndrome மற்றும் Denque Hemorrhagic fever இவைகளால் பாதிப்புக்கு உள்ளடாக்கப்படுவதை தடுக்க பப்பாளி இலையின் சாறு நல்ல மருந்தாக
பயன்படுகிறது  ஜீரண சக்தியை ஊக்குவிக்க  Papain என்ற வேதிப்பொருள் உதவுகிறது,
மலச்சிக்கலை தடுக்கிறது,

சித்த மருத்துவம்

பறங்கி இலை.
பித்தமொடு வாதம் பெருந்தாக மும்பெருகுஞ்
சத்தமொடு பேதி தலைப்படுங்காண்-சுற்றுங்
காரங்காடு மேனியள்ளே கவ்வுபுழு குச்சேரும்
பறங்கி யிலைக்குப் பகர்.
-சித்தர் பாடல்

பயன்:-
பறங்கி இலைக்குப் பித்தகோபம்,வாதம், அதிகதாகம், இரைச்சலான பேதி, சரீரப்படபடப்பு இவைகள் குணமாகும், நெஞ்செரிச்சல், உணவு உண்ணும் இலையாக, இரத்தத்தினை இறுகச் செய்து உடல் பலத்தை பெருக்கும், நோய் எதிர்ப்பு தன்மையையும் உருவாக்கும்

உண்ணும் முறை
நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 மிலி மூன்று வேளைக்கு பெரியவர்கள் உணவுக்குப்
பின் எடுத்துக்கொள்ளலாம்/ குழந்தைகளுக்கு 5 முதல் 10 மிலி மூன்று வேளைக்கு எடுத்துக் கொள்ளலாம் ( குழந்தை மருத்துவரின் ஆலோசனை அவசியம்)

இந்த பப்பாளி இலைச்சாறு டெங்கு சுரம் இருப்பவர்கள்,. சுரம் நிற்கும்வரை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நல்ல பலன் தரும். மருத்துவமனையில் இரத்தத்தட்டுக்கள் பரிசோதனை செய்து இரத்தத்தட்டுக்கள் (Platelets) குறைவாக இருப்பவர்களும், உள்நோயாளியாக இருப்பவர்களும் , 5 முதல் 7 நாட்களுக்கு  எடுத்துக்கொள்ளலாம்

பக்கவிளைவுகள்

மருத்துவ ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக பப்பாளி இலைச்சாறு எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் பப்பாளி இலை பால் நேரடியாக வாயில் அல்லது தோலில் பட்டால் எரிச்சல் ஏற்படும்

மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர், கல்லாவி
9942922002