ஊனமுற்றோர் பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 பட்டத்தை வென்ற மானசி ஜோஷி

பேசல்

னமுற்றோருக்கான பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

 

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் தனது இடதுகாலை இழந்தவர் மானசி ஜோஷி.   இவர்  ஜெர்மன் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் விளையாட்டால் ஈர்க்கப்பட்டவர் ஆவார்.   இவர் கடந்த 2015 முதல் ஊனமுற்றோர் பாட்மிண்டன் போட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.   இவர் தற்போது நடந்து வரும் ஊனமுற்றோர் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றை அடைந்தார்.

கடந்த சனிக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி இறுதிச் சுற்றில் மானசி ஜோஷி மூன்று  முறை சாம்பியன் அட்டம் பெற்ற பருல் பார்மருடன் மோதினார்.   இவர் இறுதிச் சுற்றை அடைந்த போதிலும் ஏற்கனவே பல போட்டிகளில் வெற்றி பெறாததால் அதிகம் எதிர்பார்ப்பு இன்றி இருந்தார்.     அவர் இறுதிச் சுற்றை அடைவார் எனவே பலர் எதிர்பார்க்கவில்லை.

முதலில் இவர் சாதாரணமாக விளையாடிய போதும் படிப்படியாக இவர் விளையாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  இறுதிச் சுற்றில் மானசி ஜோஷி மூன்று முறை சாம்பியனாக இருந்த பருல் பார்மரை 21 ; 12, 21 ; 7 என்னும் செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன்  பட்டத்தைப் பெற்றுள்ளார்.   தனது வெகுநாள் கனவு இப்போது பலித்துள்ளதாக இவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.