தேசிய குடியுரிமைப் பட்டியல் : அசாமில் 10000 துணை ராணுவ வீரர்கள் வாபஸ்

வுகாத்தி

தேசிய குடியுரிமைப் பட்டியல் இறுதி வடிவம் வெளியிடப்படுவதை அடுத்து அசாமுக்கு அனுப்பப்பட 10000 துணை ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 31 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அசாம் மாநில தேசிய  குடியுரிமைப் பட்டியல் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.   இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படலாம் என்னும் ஐயத்தில் சென்ற மாதம் 19 ஆம் தேதி முதல் மாநிலத்தில் துணை ராணுவப்படை காவல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த இறுதிப்பட்டியல் வெளிவரும் முன்பும் மற்றும் வெளிவந்த பிறகும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

எனவே உள் துறை அமைச்சகம் அசாமில் அமைதி நிலை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.  அதன் பிறகு அந்த மாநிலத்தில் நேற்று மீண்டும் மறு ஆய்வு நடத்தப்பட்டது.   இந்த இரு ஆய்வுகளிலும் மாநிலத்தில் அமைதி நிலை கண்டறியப்பட்டுள்ளதால் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதையொட்டி துணை ராணுவப்படை காவல் நீக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அசாம் மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதியில் இருந்து வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ள 10000 துணைக் காவல் படை வீரர்கள் தங்கள் பணி இடங்களுக்குத் திரும்பிச்  செல்ல உள்ளனர்.