தணிக்கை சர்ச்சையால் ‘பற’ படத்தின் பெயர் ‘எட்டுத்திக்கும் பற’ என மாற்றம்….!

கீராவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பற’.

படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், ‘பற’ என்ற தலைப்புக்குத் தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் படத்தின் தலைப்பை ‘எட்டுத்திக்கும் பற’ மாற்றியுள்ளனர்

‘பற’ என்பதைப் பலரும் சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். அது சாதியத்தின் குறியீடு அல்ல. ‘பற’ என்றால் பறத்தல். விடுதலையின் குறியீடாகவே இந்தத் தலைப்பை வைத்தேன் என இப்படத்தின் இயக்குநர் கீரா கூறியுள்ளார்.

இந்தப் படத்தை மார்ச் மாதம் திரைக்குக் கொண்டு வரப் படக்குழு முடிவு செய்துள்ளது.