கொரோனா வைரஸ் எதிரொலி; இந்தியாவில் பாராசிட்டமால் விலை 40% உயர்வு!

புதுடெல்லி: உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, சீனாவில் ஏற்பட்டுள்ள பணிநிறுத்தங்களின் விளைவினை எதிர்கொண்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் நீடிப்பதால் மருந்துகளிலிருந்து மொபைல் போன்கள் வரையிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான பாராசிட்டமால் மாத்திரையின் விலை, இந்தியாவில் 40% உயர்ந்துள்ள அதே நேரத்தில் பலவகையான பாக்டீரியத் தொற்றுகளுக்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் அசித்ரோமைசினின் விலை 70% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் வெடித்துக் கிளம்பிய கொரோனா வைரஸ், 1000க்கும் மேற்பட்ட மக்களைக் காவு வாங்கியுள்ளது. அத்துடன் பரவலான மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைத்ததையடுத்து உலகளாவிய விநியோகத்தில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.  அத்துடன் மக்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை மீண்டும் துவக்குவதால், இந்தியா போன்ற நாடுகள் சில மூலப்பொருட்களின் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளன.

இந்தியா உலகிற்கு மருந்துகளை வழங்குவதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளதுடன் அமெரிக்க சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் அனைத்து உற்பத்தித் தளங்களில் சுமார் 12%  தளங்களுக்கு மையமாகவும் உள்ளது. 80% மருந்து உற்பத்திக்கான மூலப்பொருளுக்கு சீனாவை நம்பியுள்ளது.