பாங்காக்

தாய்லாந்து மன்னர் முடிசூட்டி விழாவுக்கான ஊர்வல ஒத்திகை சிறப்பாக நடந்தது.

தாய்லாந்து அரசராக இருந்த பூமிபோல் அதுலய தேஜ் கடந்த 2016 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார்.   அவர் தாய்லாந்தின் அரசராக 70 வருடம் இருந்துள்ளார்.     அவருடைய இறுதி சடங்குகள் முடிந்து ஒரு வருடத்துக்கு துக்கம் அனுசரிக்கப் பட்டது.  தற்போது அவருடைய மகன் மகா வஜிரலோங்கோர்ன் அரசராக முடி சூட்டப்பட உள்ளார்

சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.    தற்போது முடி சூட்டிக்கொள்ள உள்ள அரசருக்கு பத்தாம் ராமர் எனவும் பட்டப்பெயர் உண்டு.   வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்டமான முடி சூட்டு விழாவை முன்னிட்டு அடுத்த நாள் ராணுவ ஊர்வலம் நடைபெற உள்ளது.

நேற்று இந்த ஊர்வலத்துக்கான இறுதி ஒத்திகை நடைபெற்றது.   இதற்காக 40 சாலைகள் மூடப்பட்டன.    இந்த ஊர்வலத்தில் சீருடையுடன் ராணுவத்தினர் கலந்துக் கொண்டனர்.    முடி சூட்டு விழாவுக்கு  3.1 கோடி டாலர் (ரூ.216.6 கோடி) செலவிடப்பட உள்ளது.   இந்த முடி சூட்டு விழாவில் புத்த மத வழக்கமும்,  இந்து பிராமண முறைகளும் பின்பற்றப்பட உள்ளன.