ர்பன்

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் சாம்பியன் ஆஸ்கார் பிஸ்தோரியஸ் சிறைதண்டனை அதிகரிக்கப் பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் சாம்பியன் ஆஸ்கார் பிஸ்தோரியஸ்.  இவர் 2013 ஆம் வருடம் காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டேன்கம்ப் என்பவரை தனது உல்லாச மாளிகையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.  அந்த மாளிகையின் கழிவறைக் கதவருகே அவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  திருடன் என நினைத்து தவறுதலாக சுட்டுவிட்டதாக ஆஸ்கார் தெரிவித்தார்.

அவருக்கு 2014 ஆம் வருடம் ஐந்து வருட தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இதற்கு தென் ஆப்ரிக்கா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.  இது மிகவும் குறைந்த தண்டனை எனக் கூறப்பட்டது. பத்து மாதங்கள் சிறையில் இருந்த அவர் பின்பு வீட்டுக்காவலில் வைக்கப் பட்டார்.  இது குறித்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவருக்கு தென் ஆப்ரிக்காவின் சட்டபடி குறைந்த பட்ச தண்டனையான 15 ஆண்டுகள் சிறைவாச தண்டனையை அறிவித்தது.  அவர் ஏற்கனவே சிறையில் அடைபட்டிருந்த நாட்களைக் கழித்து விட்டு மீதி உள்ள நாட்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.