பாராலிம்பிக்ஸ்: பதக்கம் வென்றவர்களுக்கு ரூ .90 லட்சம் பரிசு! மத்தியஅரசு

paralympic

டெல்லி:

பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.90 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த பரிசுகள் மத்திய அரசின்,  விழிப்புணர்வு மற்றும் விளம்பரம் நிறுவனம் திட்டத்தின் கீழ் சமுகநீதித் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 4,300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர். 4 பதக்கங்கள் மட்டுமே பெற முடிந்தது.

போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வென்றவர்களுக்கான  பரிசு தொகையை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன்,  ஈட்டி எறிதல் போட்டில் தங்கம் வென்ற தேவேந்திர ஜாக்ஜாரியா இருவருக்கும் தலா 30 லட்சம் பரிசும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மாலிக்கிற்கு ரூ.20 லட்சமும், உயரம் தாண்டுதலில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற வருண்சிங்-கிற்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: cash prize, central government, india, Medalist:, of Rs 90 lakh!, paralympics, sports, இந்தியா, பதக்கம் வென்றவர்களுக்கு, பரிசு, பாராலிம்பிக்ஸ், மத்தியஅரசு, ரூ .90 லட்சம், விளையாட்டு
-=-