சேலம்: தேர்தல் பணிக்காக சேலம் வந்த வந்த துணை ராணுவப்படை வீரர் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பற்ற வந்த நிலையில் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணைராணுவப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அன்று பாதுகாப்பு பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவத்தினர், ஈடுபட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், கடந்த 9ந்தேதி  பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவத்தினரைச் சேர்ந்த 135  பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள்  ர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம் கெங்கவல்லி தொகுதிக்கு தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவப்படை வீரர் ஜிதேந்திர சூரியவன்ஷி (வயது 50) உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதைத்தொடர்ந்து, அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,  ஜிதேந்திர சூரியவன்ஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணிக்கு வந்த இடத்தில் வடமாநில துணைராணுவப்படை வீரர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது சக வீரர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.