சுவிக்கி, ஷொமட்டோ உணவுகளுக்கு  தடை விதித்த தனியார் பள்ளி நிர்வாகம்….

வீன இயந்திரமயமான  காலத்தில், பாசமும், நேசமும் குறைந்துகொண்டேதான் வருகின்றன…  குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை டிஜிட்டல் மோகத்துக்கு அடிமையாகி தங்களது வாழ்வினை தொலைத்துக்கொண்டு வருகிறார்கள்….

இதன் தாக்கம் தற்போது பள்ளிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு மதிய உணவுகூட கொடுத்து விட முடியாத சூழல் பெரும்பாலானோர் வீடுகளில் நிகழ்ந்து வருகிறது.

பல பள்ளிகளில், பள்ளி குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை உணவுகள் அங்கேயே வழங்கப் பட்டு வருகிறது. அதற்கான பணமும், கல்விக் கட்டணத்துடன் சேர்த்து லட்சக்கணக்கில் வசூலித்துக் கொள்கிறார்கள்… அதேவேளையில் வேறு சில பள்ளிகளில் படித்து வரும் தங்களது பிள்ளைகளுக்கு பல பெற்றோர்  உணவு டெலிவரி செய்து வரும் நிறுவனங்கள் மூலம் மதிய உணவை அனுப்பி வைக்கிறார்கள் …

இந்த நிலையில்,  சென்னை மந்தவெளியில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம், தங்களது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் உணவு அனுப்பி வைக்கக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அந்த பள்ளியின் பிரின்சிபல் அனுப்பியுள்ள மொபைல் குறுஞ்செய்தியில்,  அன்பான பெற்றோர்களே…உங்களது குழந்தைகளுக்கு  மதிய உணவானது,  இனிமேல் சுவிக்கி, உபேர்ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம்  அனுப்பி வைக்க வேண்டாம், அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு இடைவேளையின் போது, சுவிக்கி, உபேர்ஈட்ஸ் போன்ற நிறுவன ஊழியர்கள் கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்கக்கூடாது என  பள்ளி வரவேற்பாளருக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது  பல்வேறு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தான் பெற்ற குழந்தைகளுக்கு சிறிதளவு மதிய உணவுகூட சமைத்து கொடுக்க முடியாத அளவுக்கு தற்போதைய யுகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பது இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது..

அன்பு, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் என்பதெல்லாம் காற்றோடு கரைந்துபோயக்கொண்டு இருக்கிறது… அதையும் வலைதளத்திலேயே தேட வேண்டிய சூழல் இன்றைய தலைமுறை யினரிடம் வளர்ந்து வருகிறது.

ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு பெற்றோர் ஒரு போனையும், பிள்ளைகள் ஆளுக்கு ஒரு போனையும் கையில் வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் பேசுவதற்கு கூட நேரமில்லாத நிலையில்… தங்களின் வாழ்கை முறை மாறிக்கொண்டே வருகிறது….

ஆனால், தாய்மை என்பதும் தாய்ப்பாசம் என்பதும் என்றைக்கும் மாறாது என்ற ஒவ்வொருவரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்… ஆனால், தற்போதைய காலங்களில் தாய்மையும் கேள்விக்குறியாகி வருகிறது….

பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் இருந்து, அவ்வப்போது உணவு ஊட்டக்கூட இன்றைய தலைமுறையினர் விரும்புவது இல்லை… அதற்காகவே ஏராளமான கிரீச்-கள் வளர்ந்து வருகின்றன…

குழந்தை பிறந்து 3 மாதம்கூடாத ஆகாத நிலையில், அந்த குழந்தையை அனாதையாக அவர்களது பெற்றோர்களே பந்த பாசம் இன்றி பிரித்து விடுகிறார்கள்.. வேலை என்ற பணத்துக்கு தாய்மை அடிமையாகி பாசத்தை விற்றுவிடுகிறது…

இதன் பாதிப்பு…  ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாமலே காலங்கள் நகர்ந்து செல்கின்றன…  வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டார்களா என்று கேட்பதற்கு கூட நாதியற்றி போயிற்று… இதன் எதிரொலியே… சுவிக்கி, ஷொமட்டோ, உபேர்ஈட்ஸ் போன்ற நிறுவனங்களின் அபரீதமான வளர்ச்சி….