பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு: பாஜ எம்பி பரேஷ் ராவல் தயாரித்து நடிக்கிறார்

டில்லி:

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து பாரதியஜனதா உறுப்பினரும், எம்.பி.யுமான பரேஷ் ராவல் தயாரித்து நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருசில மாதங்களில் தொடங்கும் என்று பரேஷ் ராவல் அறிவித்து உள்ளார்.

தற்போது 63வயதாகும் நரேஷ் ராவல், எம்பி. மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படம் தயாரிப்பது குறித்து ஏற்கனவே பிரதமர் மோடியை சந்தித்து ஒப்புதல் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை நடைபெற்று வருவதாகவும், ஸ்கிரிப்டுகள் தயாராகி  கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் பரேஷ் ராவலே நடிக்க இருக்கிறார். இந்த கேரக்டர் தனக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறிய நரேஷ், ஆகஸ்ட் 15 ம் தேதி படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்தி ருப்பதாகவும், இல்லையில்,  செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தின் சூட்டிங் தொடங்கும் என்றும் தெரிவித்து உள்ளார். படம் குறித்து வேறு தகவல்களை தெரிவிக்க பரேஷ் மறுத்துவிட்டார்.

1 thought on “பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு: பாஜ எம்பி பரேஷ் ராவல் தயாரித்து நடிக்கிறார்

  1. Lucky Paresh….gets to visit so many countries every other week during this movie shoot.
    When he said its going to challenging acting in this movie…he actually meant planning all his travel. 🙂

Leave a Reply

Your email address will not be published.