சாய்னா நேவாலாக மாறும் பரினீத்தி சோப்ரா…!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை திரைப்படமாகிறது. சாய்னாவாக நடிகை பரினீத்தி சோப்ரா நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் அமோல் குப்தா இயக்கவுள்ளார் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாய்னாவின் பேட்மிண்டன் ஆட்டங்களைப் பார்த்து, அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாடுவதற்குத் தயாராகி வருகிறேன். இதுவரையில் இவ்வளவு பேட்மிண்டன் ஆட்டங்களை நான் பார்த்ததில்லை. சாய்னாவின் உடல்மொழியைத் திரையில் வெளிப்படுத்த தீவிரமாகப் பயிற்சிசெய்து வருகிறேன்” என்று சொல்கிறார் பரினீத்தி