பாரிஸ் ஓபன் தகுதிச் சுற்று – இந்தியாவின் அன்கிதா ரெய்னா வெற்றி!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா வெற்றிபெற்றார்.

வரும் 27ம் தேதியன்று, பிரெஞ்சு ஓபன் பிரதானச் சுற்று நடைபெறவுள்ள நிலையில், ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில், செர்பியாவின் ஜோவானா ஜோவிச்சை எதிர்கொண்டார் இந்தியாவின் அன்கிதா. முதல் செட்டில் 6-4 என்று வென்ற அவர், இரண்டாவது செட்டை 4-6 என்று இழந்தார்.

இந்நிலையில், முக்கியமான மூன்றாவது செட்டை 6-4 என்று கைப்பற்றி தனது இடத்தை உறுதிசெய்துகொண்டார். அதேசமயம், ஆண்கள் தகுதிச்சுற்றில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், பிரான்ஸ் வீரரிடம் தோற்று வெளியேறினார்.