மறுதணிக்கைக்கு செல்கிறது ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம்……!

கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்’ படம் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது.

காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ எனவும், தமன்னாவை நாயகியாகக்கொண்டு தெலுங்கில் ‘தட் இஸ் மகாலெட்சுமி’ எனவும் மஞ்சிமா மோகனை நாயகியாகக் கொண்டு மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ எனவும் பருல் யாதவ்வை கதா நாயகியாகக்கொண்டு கன்னடத்தில் ‘பட்டர்பிளை’ எனவும் உருவாகியுள்ளது.

மனுகுமரன் தயாரிப்பில் , ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை கண்ட தணிக்கைக் குழு, படத்திலிருக்கும் பல காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறியதாகத் தெரிகிறது.

25 காட்சிகள் வரை முழுமையாகவோ, பகுதியாகவோ நீக்கப்பட வேண்டி வரும் என்று சொல்லப்படுகிறது. அதனால், படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு மீண்டும் அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழைத் தவிர மற்ற மூன்று மொழிகளிலுமே ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.