உலகத்திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படத்துக்கு பலரும் பாராட்டு

கோவாவில் நடைபெறும் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பலரும் பாராட்டினர்.

கோவா மாநில தலைநகர் பனாஜியில்  49-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் 20-ஆம் தேதி துவங்கிய இந்த விழா நாளை நவம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது

இதில் இந்தியன் பனோரமாப் பிரிவில் திரையிட ராமின் ‘பேரன்பு’, மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, செழியனின் ‘டூலெட்’, ப்ரியா கிருஷ்ணசுவாமியின் ‘பாரம்’ ஆகிய நான்கு தமிழ் படங்கள் தேர்வானது.

இந்த நிலையில் இன்று பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பார்வையாளர்களுக்கு தமிழ் புரியாவிட்டாலும் இத்திரைப்படத்தை ரசித்துப் பார்த்தனர்.  திரைப்படம் முடிவடைந்ததும் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

“இந்தப் படம் இன்னும் பல்வேறு விருதுகளைப் பெறும்” என்று பாராட்டினர்.