பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு விருது…!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் “பரியேறும் பெருமாள்” .கதிர், கயல் ஆனந்தி மற்றும் சில புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது.

ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை, வன்மத்தை தூண்டாமல் நடுநிலையாகவும், மிக எளிமையாகவும் சொல்லப்பட்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’. திரைப்படம் பல விருதுகளை குவிக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

புதுச்சேரி செய்தி விளம்பரத் துறை, நவதர்சன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் 🎉’இந்திய திரைப்பட விழா – 2019′ ஐந்து நாட்களுக்கு புதுச்சேரியில் நடைபெறுகிறது. இந்நிலையில் 2018ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்காக இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்றார். இதனிடையே இந்த திருவிழா கடந்த 36 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி