டில்லி,

லைநகர் டில்லியில் சட்டவிரோதமாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து படம் எடுத்து அனுப்பினால், ரூ.50 பரிசு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார்.

டில்லியில் அலுவலகத்துக்கு வருபவர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் தங்களது கார்களை சாலையோரமே நிறுத்திவிடுகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, சட்டவிரோதமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ள கார்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு 10% பரிசு  வழங்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்  கட்கரி அறிவித்து உள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், அதில் 10 சதவிகிதமாக, ரூ.50 தகவல் தெரிவித்தவருக்கு வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

யாராவது அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் சட்டவிரோதமாக கார்களை பார்க்கிங் செய்தால், செல்போனில் புகைப்படம் எடுத்து அதை தமது அமைச்சக அதிகாரிகளுக்கோ அல்லது காவல்துறைக்கோ அனுப்பலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.