பாராளுமன்ற தேர்தல்: சென்னையில் களமிறங்கப்போகும் பவர் ஸ்டார்…

சென்னை:

மிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆன பவர் ஸ்டார் சீனிவாசன் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது ஜாமினில் உள்ள அவர்,  இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறி வருகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவர் ஸ்டார்,  மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில்  தென்சென்னை தொகுதியில் களமிறங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

தான் ஓராண்டுக்கு முன்பே அத்வாலே கட்சியில் இணைந்து விட்டதாகவும், தற்போது கட்சி சார்பில்,  தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற போகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

சென்னை தொகுதியில், அதிமுக சார்பில் வேட்பாளராக அமைச்சர் ஜெயக்குமாரின் மகன்  ஜெயவர்தனும், திமுக சார்பில் தமிழச்சி தங்க பாண்டியனும் களத்தில் உள்ளனர்.