மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்: அவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மக்களளை இன்று கூடியதும், காங்கிரஸ் எம்பியான சுரேஷ், கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய போராட்டம் தொடர்பாக அவை ஒத்தி வைக்க தீர்மான நோட்டீசை அளித்தார்.

மாநிலங்களவை கூடியதும், கொரோனாவால் மறைந்த பாஜக எம்பி அசோக் கஸ்திக்கு அவை தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்தார். பல எம்பிக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக விவாதிக்க நோட்டீஸ் வழங்கினர்.

மாநிலங்களவையில் ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா, அமைச்சர்களுக்கான ஊதியக்குறைப்பு, படிகள் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

You may have missed