காணொலி காட்சி மூலம் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த முடியுமா?

--
டெல்லி:
கொரோனா பாதிப்பு காரணமாக சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டிய நிலையில், நாடாளு மன்ற குழு கூட்டங்களை காணொளி காட்சி மூலம்  நடத்தமுடியுமா என்பதுகுறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற செயலாளருக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் பவரல் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தை எப்படி நடத்து என்பது குறித்து, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு இன்று ஆலோசனை நடத்தினர். அதையடுத்து,   வீடியோ மாநாடு மூலம் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த முடியுமா என்று ஆராய இரு அவைகளின் செயலாளர்களிடம்  மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடாளுமன்ற கூடுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட பல மாநில எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, இன்று  உபராஷ்டிரபதி நிவாஸில்  சபாநாயகர் ஓம்பிர்லா, துணை குடியரசுத் தலைவரும், ராஜ்யசபா சபாநாயகருமான வெங்கைநாயுடுவை சந்தித்து நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர்.
விவாதத்தின்போது,  நடைமுறையில் உள்ள சூழ்நிலையையும், நாடு முழுவதும் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளின் பின்னணியையும் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில்  வழக்கமான வழக்கமான கூட்டங்களை நிலைமை அனுமதிக்காவிட்டால், அத்தகைய கூட்டங்களை இயக்குவதற்கான மாற்று வழிகள் ஆராயப்படுவது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாராளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தற்போதைய வணிக விதிகள், பல்வேறு நாடுகளின் நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டங்களை நடத்தும் நாடாளுமன்றக் குழுக்களின் நன்மை தீமைகள் குறித்து விரிவாக ஆராய இரு அவைகளின் செயலாளர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இத்தகைய மெய்நிகர் கூட்டங்கள் மற்றும் இதுபோன்ற கூட்டங்களுக்குத் தேவையான பாதுகாப்பான தொழில்நுட்ப தளங்களை இயக்குவதற்குத் தேவையான நேரம் ஆகியரவை குறித்தும் பரிசீலித்து அறிக்கை அளிக்கும்படியும் அதில் தெரிவிக்கப்பட்டு உளளது.