தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஒன்றிணைப்பு..! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை ஒன்றிணைக்கும் மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. கடந்த 27ம் தேதி இந்த மசோதா நிறைவேறியது.

இந் நிலையில் இந்த மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா குறித்து, அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியிருப்பதாவது:

இந்த நடவடிக்கை நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எளிதாக்க உதவும். அதே நேரத்தில் அப்பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

முன்னதாக, ஜம்முகாஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக்கிய பிறகு, நாட்டில் 9 யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை 8 ஆக குறைந்திருக்கிறது.