எம்.பிக்களுக்கு மட்டுமே நோட்டு மாற்ற அனுமதி: நாடாளுமன்ற வளாக வங்கி காட்டும் பாகுபாடு

நாடாளுமன்ற வளாகத்தினுள் உள்ள ஸ்டேட் பேங்க் கிளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நோட்டுகள் மாற்றித்தரப்படும் என்று அந்த வங்கி ஒரு அறிவிப்பை ஒட்டி வைத்திருக்கிறது. இது பலரது கண்டனத்தை அள்ளிக் குவித்திருக்கிறது.

notice_sbi

ஜனநாயகத்தின் கோவில் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தில் ஏன் இந்த பாகுபாடு? எம்.பிக்களுக்கு இருக்கும் உரிமை நாடாளுமன்றத்தில் கடினமாக உழைக்கும் ஊழியர்களுக்கு இல்லையா என்று அசாமைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தனது ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். இதை அறிவிப்பை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.