அதிமுக – தெலுங்கு தேசம் அமளி ::20 ஆம் நாளாக பாராளுமன்ற தொடர் முடக்கம்

டில்லி

நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 20 நாட்களாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.   இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடு பட்டு வருகின்றன.   ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் அமைச்சரவையில் இருந்து விலகியதுடன் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.    மேலும் தற்போது காவிரி பிரச்னை காரணமாக அதிமுகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த இரு கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தினால் பாராளுமன்ற தொடர் கடந்த 20 நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இன்றைய கூட்டத் தொடரில் வன்கொடுமை சட்ட திருத்தத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.   இதனால் ஆத்திரம் அடைந்த மாநிலங்களவை தலைவ்ர் வெங்கையா நாயுடு “இது ஒரு ஜனநாயகப் படுகொலை” என விமர்சித்துள்ளார்.    இன்று அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.