தமிழ்மொழி குறித்த கேள்விக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! ராகுல்காந்தி

டெல்லி:

மிழ்மொழி குறித்த துணைகேள்விக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார்.

நாளுமன்ற மக்களவையில் இன்றைய விவாதத்தின்போது, தமிழககத்தைச் சேர்ந்த எம்.பி., தமிழ் மொழி குறித்த துணை கேள்வி எழுப்பினார். ஆனால், அதை அனுமதிக்க சபாநாயகர் அனுமதிக்க மறுத்து விட்டார். இது பரபரபப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சபாநாயகரின் இந்த நடவடிக்கை காரணமாக, ​​தமிழக மக்கள் இன்று பாராளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டனர், இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் பாராளுமன்றத்தின் நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் மரபுகளை புறக்கணிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.