கருப்புப் பணம் குறித்த 3 அறிக்கைகளையும் வெளியிட நிதி அமைச்சகத்துக்கு உத்தரவு

டில்லி

ருப்புப் பணம் குறித்து அளிக்கப்பட்டுள்ள 3 அறிக்கைகளையும் பொதுமக்களுக்கு வெளியிட நிதி அமைசகத்துக்கு பாராளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.

உலக நாடுகளில் அதிக கருப்புப் பணம் உள்ள நாடு இந்தியா என கூறப்பட்டது.  இது குறித்து தேசிய பொது நிதி மற்றும் பொருளாதார கல்வி நிறுவனம்,  தேசிய பொருளாதார மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் தேசிய மேம்படுத்தப்பட்ட் பொருளாதார ஆய்வு கல்வி நிறுவனம் ஆகிய மூன்றும் ஆய்வு நடத்தின.  ஒவ்வொரு ஆய்வுகளின் முடிவுகளும் அறிக்கைகளாக நிதி அமைச்சகத்திடம் தரப்பட்டன.

இந்த மூன்று அறிக்கைகளும் மூன்று விதமான முடிவுகளை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.   ”ஒரு அறிக்கையில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பணமதிப்பில் 2% மட்டுமே கருப்புப் பணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் மற்றொரு அறிக்கையில் உலக நாடுகளில் இந்தியாவில் மட்டுமே அதிக அளவில் கருப்புப் பணம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.” என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த அறிக்கைகளை வீரப்ப மொய்லி தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்துள்ளது.   அதை ஒட்டி பாராளுமன்ற வளாகத்தில் நடந்த நிலைக்குழு கூட்டத்தில் நிதித்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே மற்றும் நேரடி வரி விதிப்புத் துற தலைவர் பிரமோத் சந்திர மோதி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நிலைக்குழு மூன்று அறிக்கைகளையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என தீர்மானித்துள்ளது.   அதன்படி பாராளுமன்ற நிலைக்குழு இந்த மூன்று அறிக்கைகளையும் பொதுமக்கள் பார்வைக்கு அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகத்துக்கு  உத்தரவிட்டுள்ளது.