பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: உரிமைக்குரல் எழுப்புவார்களா தமிழக எம்.பி.க்கள்?

ரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.

முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும்.  நாளை முதல் கூட்டம் தொடர்ந்து நடைபெறும்.

வரும் ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் 23 சட்டமுன்வடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன.

தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவு, மோட்டார் வாகன சட்டத்திருத்த முன்வடிவு போன்றவையும் இதில் அடங்கும். மேலும் தவிர புதிதாக 20 சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

உர்ஜித் படேல் ராஜினாமா, ரபேல் போர் விமான ஒப்பந்தம், சி.பி.ஐ. சர்ச்சை, ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன.

பாராளுமன்ற லோக்சபாவி அ.தி.மு.க. எம்.பிக்களே அதிகம் உள்ளனர். மேகதாது மற்றும் கஜா புயல் நிவாரணம் ஆகிய விவகாரங்கள் குறித்து  இவர்கள் குரல் எழுப்புவார்களா என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.