மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்பை விட வேகம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நாள்தோறும் கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

சாதாரண மக்கள் மட்டுமல்லாது, அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந் நிலையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். அந்த பதிவில் அவர்  கூறி இருப்பதாவது: நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை.

சோதனையின் முடிவில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. எனவே மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

You may have missed