சென்னை:

17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல்கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி திமுக. 2.23 கோடி வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 11ந்தேதி முதல் மே 19ந்தேதி வரை நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த 23ந்தேதி எண்ணப்பட்டது. இதில், பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் அட்சியை பிடித்துள்ளது.

அதேவேளை தமிழகத்தில் நடைபெற்ற 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலில் 38 இடங்களை கைப்பற்றி  திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிமுக கூட்டணி  ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்  விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி

திமுக கூட்டணி பெற்ற வாக்குகள்:  2.23 கோடி

அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள்:  1. 28 கோடி

அமமுக பெற்ற வாக்குகள்:  22 லட்சத்து 25 ஆயிரம்

நாம் தமிழர் கட்சி : 16 லட்சத்து 45 ஆயிரம் 

மநீம  கட்சி பெற்ற வாக்குகள்: 15 லட்சத்து 75 ஆயிரம் 

நோட்டா வாக்குகள்:  5 லட்சத்து 41ஆயிரம் 

இதில்  வாக்குகள் பெற்று திமுக கூட்டணி முதலிடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி 2வது இடத்திலேயும், அமமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 4வது இடத்தில் உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கிடையில், எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களும் அதிகரித்து உள்ளனர். சுமார் 5.41 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு தங்களது வாக்கினை செலுத்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.