டில்லி:

டைபெற்று முடிந்த லோக்சபா (2019) தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் 86% வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்ததலில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் எத்தனை சதவிகிதம் என்பதையும் வெளியிட்டு உள்ளது.

அதுபோல நாட்டிலேயே அதிகபட்சமாக லட்சத்தீவில் 85.21% வாக்குகள் பதிவானதாகவும் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல்  ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 67% பேர் வாக்களித்தாக  தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதுபோல, அதிகமான பெண்கள் இத்தேர்தலிலேயே வாக்களித்ததாகவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்த 17 மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு வாக்களித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதங்கள் குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், 

பாஜக 37.78% வாக்குகள்,

காங்கிரஸ் 19.7 % வாக்குகள்,

திரிணாமுல் காங்கிரஸ் 4.11 % வாக்குகள்,

பகுஜன் சமாஜ்வாதி கட்சி 3.67% வாக்குகள்,

சிபிஎம் 1.77வாக்குகள் %,

தேசியவாத காங்கிரஸ் கட்சி 1.4%வாக்குகள்,

சிபிஐ 0.59% வாக்குகள் பெற்றுள்ளன.

அதிக வாக்குகள் பதிவான மாநிலம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக பதிவான வாக்குகளில் லட்சத்தீவில் அதிகபட்சமாக 85.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக நாகலாந்தில் 83% வாக்குகள் ப

மேற்கு வங்களாத்தில் 81.76% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவிலேயே குறைந்த பட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 44.97% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் முறையே 57.35% மற்றும் 59.21% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

தொகுதிகள் அடிப்படையில் இந்தியாவிலேயே அசாம் மாநிலத்தின் துப்ரி தொகுதியில் அதிகபட்சமாக 90.66% வாக்குகளும்,

குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரின் அனந்நாக் தொகுதியில் 8.98% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்த தகவலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.