நாடாளுமன்ற தேர்தல்: ஜனவரி 11, 12ந்தேதி பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்!

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில்  ஜனவரி 11, 12ந்தேதி டில்லியில் பாஜக தேசிய கவுன்சில்  கூட்டம் 2 நாட்கள் நடைபெற உள்ளது இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.

டில்லியில் நடைபெற்ற மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்துக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் டில்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

(file photo)

அதன்படி,  டில்லி ஜந்தர் மந்தரில் வரும் ஜனவரி மாதம் 11,12-ம் தேதியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில்  இதில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாஜக நிர்வாகி கள் சுமார் 12,000 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் குறித்தும், அதை எதிர்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக தலைவர்கள் அறிவுரை வழங்குவார்கள் என்றும், கூட்டணி சார்பாக முடிவெடுப்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி