ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல்: மத்தியஅமைச்சர் சுஷ்மா தகவல்

சென்னை:

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக  மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சி சார்பில்  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன.

இது தொடர்பாக  காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான  நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு  பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார்.

இந்த நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழக  பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது,  நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரலில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: April Parliamentary elections, Central minister Sushma informed, Parliamentary elections, Sushma information, Susma swaraj, ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல், சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற தேர்தல், மத்தியஅமைச்சர் சுஷ்மா
-=-