டில்லி:
பாராளுமனற்  குளிர்கால கூட்டத்தொடர்  அடுத்த மாதம் (நவம்பர்) 16ந் தேதி தொடங்கும் என பாராளுமன்ற செயலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வழக்கமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் இறுதியில்தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு நிர்வாகக் காரணங்களுக்காக பார்லி., குளிர்காலக் கூட்டத் தொடரை முன்கூட்டியே  தொடங்குவது என பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
parliament_thumb
அதையடுத்து, பாராளுமன்ற தொடர் தொடங்குவதற்கான  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று(அக்.,19) வெளியிடப்பட்டது. பாராளுமன்ற  செயலர் இதனை வெளியிட்டார்.
ஒரு மாதம் நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரானது டிச., 16ந் தேதி நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படு கிறது.
 
காஷ்மீர் எல்லை பகுதியான உரி தாக்குதல், காஷ்மீரில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் கலவரம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’,  காவிரி விவகாரம், வெளியுறவுக் கொள்கைகள், பாக்., மீதான நடவடிக்கை, ஜிஎஸ்டி துணை மசோதாக்கள்  உள்பட பல்வேறு விவகாரங்கள் பார்லி., குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ளது.
இதனால் இந்த கூட்டத்தொடர் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.