டெல்லி: வாட்ஸ்அப் வெளியிட்ட பாலிசி அக்ரிமென்ட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இதுகுறித்து,  நாடாளுமன்ற நிலைக்குழு ஜனவரி 21ந்தேதி விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.  அன்றைய தினம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சமூக வலைதள நிறுவனம், அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தது. இமஙனப. தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட உள்ளதாக  பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் ஒன்றை   அனுப்பியது. அன்படி,  பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு, வணிக நோக்கில் அந்த தகவல்கள் பேஸ்புக் போன்ற பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது சர்ச்சையானது, தனிநபர் உரிமையில் தலையிடுவதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், வாட்ஸ் அப் பாலிசி கொள்கை விவகாரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 21ந்தேதி விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. அன்றைய தினம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவீட்டர் போன்ற சமூக வலைதள நிறுவன இந்திய பொறுப்பாளர்கள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.