முகநூல் நிறுவன விவகாரம் – செப்டம்பர் 2ம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு!

புதுடெல்லி: முகநூல் நிறுவனத்தின் பா.ஜ. சார்பு குறித்து வெளியான தகவல்கள் குறித்து விசாரிக்க, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, செப்டம்பர் 2ம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தை சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கும் என்று பத்திரிகை.காம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது, அதற்கான தெதி வெளியாகியுள்ளது.

முகநூல் விவகாரம், இந்திய அரசியலில் கடும் மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சசிதரூரை பாரதீய ஜனதாவினர் கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகநூல் தொடர்பாக விசாரிக்க, வரும் செப்டம்பர் 2ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூடி விசாரிக்கவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.