சென்னை,

திய உயர்வுகோரி  சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரியும், முழு நேர பணி வழங்க கோரியும்,  பணி நிரந்தரம் கோரியும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 3ந்தேதி வள்ளுவர் கோட்டத்தில்  பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தில் தங்களுக்கு ஆதரவான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து அரசு  ஏந்தவித அறிவிப்பும் வெளியிடாததை  கண்டித்து போராட்டம் செய்து வருகின்றனர்.

(பைல் படம்)

விஜயகாந்த் ஆதரவு

இதற்கிடையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது,

கடந்த 2 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு தொகையை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு வழங்கும் நிதியை அந்தந்த துறைகளுக்கு உடனே வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.