18ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு பூஜைகள்

சென்னை:

ரும் 18ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசி வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும்.

சென்னையில் உள்ள பிரபலமான  திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில் ஏகாதாசியை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதும்  என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தசாதிதி கோவின் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, வரும் 18 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு பார்த்தசாரதி கோயிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதாக கூறினார்.

இந்தாண்டு வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  மாற்றுதிறனாளிகளுக்கு காலை 8 மணி முதல் 10 மணி வரையும், முதியோர் களுக்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை தெற்கு மாட வீதியில் வரிசையில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் சொர்க்க வாசல் திறப்பை கண்டுகளிக்கும் வகையில் கோயிலுக்கு வெளியே எல்இடி திரைகள் அமைக்கப்படும்.  பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தவிர்க்க நான்கு மாடவீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி மூலமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.